இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் ரயில்வே தேர்வு! முக ஸ்டாலின் கண்டனம்!

06 September 2019 அரசியல்
mkstalin1.jpg

இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே, ரயில்வே துறைத் தேர்வுகள் நடைபெறும் என, ரயில்வேத் துறை அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு.முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ரயில்வேத் துறை இயக்குநர் டி.ஜோசப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டு நடைபெற்றத் தேர்வும் சரி, 2019ல் நடைபெற்ற தேர்வும் சரி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என்ற மொழிகளிலேயே நடைபெற்றன.

இந்நிலையில், தென்னக இரயில்வே சார்பில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் வந்திருந்தது. மேலும், அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் இந்த ரயில்வேத் தேர்வினை எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், முன்வைக்கப்பட்டது. இதனை நன்கு ஆராய்ந்துப் பார்த்த பின், இறுதியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே, இரயில்வேத் துறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என, அறிவிக்கப்பட்டது.

இது குறித்து, இனி எவ்வித கடிதம் வந்தாலும், இதுவே இறுதி முடிவாகும். இதில் மாற்றமில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இனி இரயில்வே நடத்தும் அனைத்துத் தேர்வுகளும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலேயே நடைபெறும் என்று, உறுதியாகி உள்ளது.

இதற்கு தற்பொழுது திமுக தலைவர் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப் போராட்டத்தை தூண்ட வேண்டாம் எனவும், அவர் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இரயில்வேத் தேர்வினை நடத்துவதால், தொடர்ந்து வடமாநிலத்தவர்கள், பரிட்சையில் ஹிந்தி தெரிந்த வடமாநிலத்தவர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், இரயில்வேயில் பணி புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS