மழை வெள்ளத்தால் 15க்கும் மேற்பட்டோர் பலி!

20 October 2019 அரசியல்
flood.jpg

ரஷ்யாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில், பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அங்கு பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் சேய்பா என்ற ஆறு ஓடுகின்றது. அதன் குறுக்கே தனியார் நிறுவனம் ஒன்று, நீர் அணையைக் கட்டியிருக்கின்றது.

நேற்று, வழக்கம் போல, தொழிலாளர்கள் மழையின் காரணமாக வீட்டில் இருந்தனர். அப்பொழுது, கடுமையான மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது, வீடுகளில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்திருக்கின்றனர். திடீரென்று அணை உடைந்ததால், வெள்ள நீர், வீடுகளுக்குள் இருந்தவர்களை சூழ்ந்து கொண்டது. இதனால், அவர்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

பொதுமக்காள் உஷார் ஆவதற்குள், வெள்ள நீர் அவர்களை இழுத்துச் சென்றுவிட்டது. இதனால், ரஷ்யா பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், 15 பேரின் சடலங்களை மீட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்துப் பேசிய சைபீரியா கவர்னர், அங்கு சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற அணை இரகசியமாகக் கட்டப்பட்டுள்ளது. அந்த அணையினால் தான் இவ்வளவுப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து, உயர் மட்ட அளவில் விசாரணை நடத்தப்படும் எனவும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

HOT NEWS