ராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலாக தொடங்க உள்ளது! நாளை உள்ளூர் விடுமுறை!

05 November 2019 அரசியல்
tanjoretemple.jpg

நாளை ராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜராஜன் பிறந்த, ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில், அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடுவது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டும் அந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான, ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, காணாமல் போன ராஜராஜ சோழனின் சிலையும் தஞ்சையை வந்தடைந்ததால், இந்த முறை கோலாகலமாக திருவிழா நடைபெற உள்ளதாக, அப்பகுதி வாழ் மக்கள் மகிழ்ச்சியில் கூறியுள்ளனர்.

1034வது சதய விழாவினை ஒட்டி, நாளை (06-11-2019) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை. அதற்குப் பதிலாக நவம்பர் 23ம் தேதி அரசு வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended Articles

HOT NEWS