ராஜேந்திர பாலாஜியினை ஏன் பதவியில் இருந்து நீக்கினர் தெரியுமா?

25 March 2020 அரசியல்
rajendrabalaji1.jpg

பேச்சாடா பேசுனா கொஞ்சனஞ்ச பேச்சா பேசின என, வடிவேலு காமெடிப் பார்த்து இருப்பீர்கள். அது போலவே தற்பொழுது சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு வந்ததில் இருந்து, தன் வாய்க்கு வந்த அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி, எதிர்கட்சியினரையும் சரி, எதிரிகளாகக் கருதியவர்களையும் சரி, வசைபாடி வந்தார் ராஜேந்திர பாலாஜி.

எல்லாத்தையும் எங்கப்பன் மோடி பார்த்துக்குவான் என, மேடையில் வீரமாக முழங்கினார். இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பேசினார். இதனால், இஸ்லாமியர் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என பலரும் எச்சரித்த நிலையில், நான் இந்துக்களின் ஓட்டுக்காகப் பேசுகின்றேன் என்று கூக்குரலிட்டவர்.

தமிழகப் பால்வளத்துறை அமைச்சராகவும் இவர் இருந்து வருகின்றார். சமீப காலமாக அவர் பேச்சானது, கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுககாரன் என்றால் விசில் அடிக்கணும், கை தட்டனும், சவுண்டு கொடுக்கணும், யாராவது ஓவரா பேசுனா கல்லை எடுத்து அடிக்கணும். காங்கிரஸ்காரன் தான் அமைதியாக உட்கார்ந்து இருப்பான் எனப் பேசினார். இது அனைத்திற்கும் உச்சகட்டமாக அமைந்தது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், மாணிக் தாகூர் என்ற ஒரு நாதாரி எம்பியாக தேர்வு செய்யப்பட்டான். அவனை யாராவதுப் பார்த்தால், ரப்பர் குண்டால் வயிற்றில் சுடுங்கள். எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கின்றேன் எனவும் பேசியிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் சார்பில், பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் கூட்டாக இணைந்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர்.

அதில், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

HOT NEWS