எங்களுக்கு கூட்டணியினை விட, கொண்ட கொள்கையே முக்கியம் என, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் கேள்விக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், அதிமுக கட்சியானது பொங்கும் கடலாகும். அது அழியாது. அதில் கொந்தளிப்பு ஏற்பட்டாலும் அப்படியேத் தான் இருக்கும். கூட்டணி என்பது துண்டு போன்றது. ஆனால் கொள்கை என்பது வேட்டி போன்றது. கூட்டணியினை விட்டுத் தரலாம். ஆனால் கொண்ட கொள்கையினை விட்டுத் தர இயலாது என அவர் கூறியுள்ளார்.