ரஜினி, கமல் மற்றும் விஜய் போன்றோர் அரசியலுக்கு வர நினைக்கும் பொழுது, அஜித் அரசியலுக்கு வரக் கூடாதா என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாட்ஷா படம் வெளியான காலத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், அவர் நிச்சயம் ஆட்சியமைத்திருப்பார். ஆனால், தற்பொழுது நிலை வேறு. அவர் ஒரு ஆன்மீகவாதி. அந்த அடிப்படையில், நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறியிருப்பார்.
ரஜினி, கமல் மற்றும் விஜய் போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர நினைக்கும் பொழுது, அதிமுகவிற்காக அஜித் வரக்கூடாதா எனவும், தேவைப்பட்டால் அதிமுகவிற்கு விஸ்வாசமான நட்சத்திரங்களை, தேர்தலில் களமிறக்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற, அதிமுக அனைத்து சித்து வேலைகளையும் செய்யும் எனவும் கூறியுள்ளார்.