கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இமயலமலைக்குப் பயணம் சென்றிருந்த அவர், இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு திரும்பினார். அதன் பின்னர், தன்னுடைய ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு தனித் தனியாக வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கான சாவியினை இன்று, தன்னுடைய அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
வீட்டின் சாவியினை வழங்கும் பொழுது, நாகை மாவட்டத்தினைச் சேர்ந்த ரஜினியின் ரசிகர் மன்ற செயலாளர் திரு. ராஜேஸ்வரன் உடன் இருந்தார். அவர் கையில் வீட்டின் சாவியினை வாங்கும் பொழுது, வாங்கியவர்களில் ஒரு சிலர் கண் கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.