வரி ஏய்ப்பு செய்த ரஜினிகாந்த்! தற்பொழுது வட்டிக்கு விட்டதாக தகவல்!

31 January 2020 சினிமா
rajinikanthdoordarshan.jpg

கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கில், சுமார் 66.22 லட்ச ரூபாயினை அபராதமாக விதித்து வருமான வரித் துறை. இதனை எதிர்த்து ரஜினி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், முறையான ஆதாரம் இல்லை என, ரஜினி மீதிருந்த குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இருப்பினும், மீண்டும் வருமான வரித்துறை சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே, கடந்த 28ம் தேதி அன்று, இந்த வழக்கினை வாபஸ் பெறுவதாக வருமான வரித்துறை கூறியது. இதனையடுத்து, இந்த வழக்கினை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இது குறித்து, வருமான வரித்துறையிடம், ரஜினியின் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தான் கையில் இருந்த பணத்தினை வட்டிக்கு விட்டதாகவும், முதலில் சிறிய அளவில் லாபம் வந்தது எனவும், பின்னர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

2002-2003ம் ஆண்டு காலக்கட்டத்தில் 2.63 கோடி ரூபாயானது, வட்டிக்கு விடப்பட்டது எனவும், அதன் மூலம் 1.43 லட்சம் லாபம் கிட்டியுள்ளது. பின்னர், 1.71 கோடி ரூபாயினை வட்டிக்கு விட்டதாகவும், அதற்கு 33.93 லட்ச ரூபாயானது நஷ்டமாகியுள்ளது எனவும், அவர் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வட்டிக்கு விடுவதைத் தொழிலாக செய்யவில்லை எனவும், பொருளை அடமானம் வைத்து பணம் பெறுவதை மட்டுமே வட்டித் தொழில் என நினைத்திருந்தேன் எனவும், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தினை வட்டிக்கு விட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட வருமான வரித்துறை, அவர் மீதான வழக்கினை நீக்கியது.

HOT NEWS