சமூக சேவைகளில் ரஜினி மக்கள் மன்றம்! அரசியலுக்கு வராமலே சேவை செய்யும் ரஜினி!

05 August 2019 அரசியல்
rajinimakkalmandram.jpg

ரஜினிகாந்த் சொல்வதை வேத வாக்காக கேட்டு, செயல்பட்டு வருகின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தினர். தமிழக மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால், கஷ்டப்பட்ட பொழுது, தாமாக முன்வந்து, தண்ணீர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்த ரஜினி மக்கள் மன்றத்தினர், தற்பொழுது ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பல நலத்திட்டப் பணிகளை செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கீரபாளையம் ஒன்றியம், வெள்ளியக்குடி கிளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 04-05-2019 அன்று, பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட செயலாளர் திரு.ஓ.எல்.பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு, இலவச விதைகள் வழங்கப்பட்டுள்ளன. 50 பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், மூத்த குடிமக்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை ஆகியவை வழங்கியுள்ளனர்.

நாமகிரிப் பேட்டையில் உள்ள, பெரிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்க வந்ததாகவும், தாங்கள் எடுத்தத் திரைப்படம் பாதியில் நின்றவிட்டதால், தயாரிப்பு செலவுகளுக்காக திருட வந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர், சாத்தங்குப்பம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பல கிராமங்களில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்கள் சேவையில், ரஜினிமக்கள் மன்றத்தினர், தனித்து தெரியும் விதத்தில் பலவித சேவைகளை தாமாக முன் வந்து செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியல் என்னும் போருக்கு வருவதற்கு முன்னறே, அவருடைய ரசிகர்கள் போர்க்களத்தில் இறங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS