நவம்பர் 30ம் தேதி அன்று, தன்னுடைய மன்ற நிர்வாகிகளுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் இந்த ஆண்டு அரசியலுக்கு வருவார் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்தோ தனக்கு உடல்நலம் சரியில்லை என சூசகமாக கூறி இருந்தார். இந்த சூழ்நிலையில், பாஜகவின் மூத்தத் தலைவர் அமித் ஷா, தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ரஜினிகாந்தினை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் சந்திக்கவில்லை.
இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என பலரும் பேச ஆரம்பித்தனர். இந்த சூழலில், இந்தப் பேச்சுக்களைப் பொய்யாக்கும் வண்ணம் நவம்பர் 30ம் தேதி அன்று, தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் சந்திக்க உள்ளார் ரஜினிகாந்த் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்தக் கூட்டத்தில் அவர் என்ன பேசுவார் எனப் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.