ரஜினியின் கோரிக்கை ஏற்பு! விசாரணை ஆணையம் தகவல்!

25 February 2020 சினிமா
rajinikanth123.jpg

விசாரணை ஆணையத்தின் முன்பு, ரஜினிகாந்த் ஆஜராவதில் இருந்து தற்பொழுது விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, தூத்துக்குடியில் நடைபெற்ற துபாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கு நடைபெற்ற கலவரத்தின் பொழுது பலரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, ரஜினிகாந்த் சென்று நலம் விசாரித்தார். அப்பொழுது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து விட்டதாகவும், அதனால் கலவரம் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறினார். தொடர்ந்து போராட்டம், போராட்டம் என்றுக் கூறினால், நாடே சுடுகாடாகிவிடும் எனவும் காட்டமாகப் பதிலளித்தார்.

இதனையடுத்து, தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரித்து வரும், ஒருநபர் விசாரணை ஆணையம், ரஜினிகாந்தின் கருத்துக் குறித்து விளக்கமளிக்க, நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியது. இதிலிருந்து, தமக்கு விலக்க அளிக்க வேண்டும் எனவும், நான் விசாரணைக்கு ஆஜரானால், ரசிகர்கள் பெருமளவில் குவிவர் எனவும், இதனால், சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படலாம் எனவும், ரஜினிகாந்த் கூறினார்.

இதனை, விசாரணை ஆணையம் ஏற்றுக் கொண்டதாக, ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்தார். அவர் கூறுகையில், ரஜினிகாந்திடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை, சீலிட்ட கவரில் வைத்து விசாரணை ஆணையம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS