மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி! அப்பலோ பரபரப்பு அறிக்கை!

25 December 2020 சினிமா
rajnimakkalmandram.jpg

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம், அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக, சென்னையில் இருந்து ஹைதராபாத் கிளம்பிச் சென்றார். அங்கு படத்தின் சூட்டிங்கானது, தொடங்கியது. இந்த சூழலில், படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 ஊழியர்ளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பானது ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும், கொரோனா தொற்று இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது.

ஆனால், அந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கும் தொற்று இல்லை என்ற போதிலும், 70 வயதினைத் தாண்டியவர் என்பதால், அவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருப்பினும், அவர் உடலில் இரத்த அழுத்தத்தின் அளவானது, மாறி மாறி தொடர்ந்து நிலையில்லாமல் இருக்கின்ற காரணத்தால், அவர் தற்பொழுது ஹைதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்திற்கு கொரோனா இல்லை எனவும், இருப்பினும் இரத்த அழுத்தம் சீராக இல்லாதக் காரணத்தால், அவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறியுள்ளது. இது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS