தந்தையையும், மகனையும் தாக்கிக் கொன்ற வழக்கில், சத்தியமா குற்றம் செய்தவர்களை விட்டுவிடக் கூடாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்களால், அப்பகுதியினைச் சேர்ந்த பென்னிங்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பலரும் தங்களுடைய கண்டனத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் முன் வந்தது.
நீதிமன்றத்தின் சார்பில், நீதிபதி பாரதிதாசன் சென்று சாத்தான்குளம் காவல்நிலையத்தினை ஆய்வு செய்தார். அப்பொழுது அங்கிருந்த காவலர்கள் அவரை தரக் குறைவாகப் பேசியதாகவும், ஒருமையில் பேசி விசாரிக்கவிடாமல் தடுத்ததாகவும் பாரதிதாசன் நீதிமன்றத்திடம் கூறினார். இதற்குப் பல தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தினைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், தன்னுடைய கண்டனத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை, மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விட்டு விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது என்று கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி உள்ளது.