கொரோனா வைரஸ் காரணமாக, தமிழ் சினிமாவின் அனைத்துப் படங்களின் சூட்டிங்குகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பெப்சி அமைப்பினைச் சார்ந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வருமாறு, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், சூர்யா குடும்பத்தினர் 10 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சமும் அளித்தனர்.
நடிகர் பார்த்திபன் 25 கிலோ எடையுள்ள அரிசி மூடைகளையும், மனோபாலா 10 அரிசி மூடைகளும் வழங்கி உள்ளனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பங்காக 50 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார். இது குறித்த கசோலையினை வழங்கி உள்ளார். அவரைத் தொடர்ந்து, நடிகர் விஜய்சேதுபதி தன் பங்காக 10 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார்.
இவர்கள் தங்களுடைய உதவியினை தந்துள்ள நிலையில், நடிகர் விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் விரைவில் தங்கள் பங்காக பண உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.