செம்மொழி அமைப்பிற்கு முதன்மை இயக்குநரை நியமனத்திற்கு பாராட்டு தெரிவித்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள, செம்மொழி தமிழாய்வு அமைப்பிற்கு முதன்மை இயக்குநராக ரா.சந்திரசேகரன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கு, தன்னுடைய பாராட்டுக்களையும் நன்றிகளையும் ரஜினிகாந்த் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார். இந்த கடிதத்தினை டிவிட்டரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மத்திய அரசு அனைத்து மொழிகள் மீதும் அக்கறை வைத்துள்ளது எனவும், அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.