சிஏஏ போராட்டத்தின் பொழுது ரசிகர்கள் சந்திப்பு! விவசாயி போராட்டத்தின் பொழுது மன்றத்தினர் சந்திப்பு!

30 November 2020 சினிமா
rajinimeeting.jpg

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இன்று காலையில் சென்னையில் உள்ள தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தன்னுடைய 37 மாவட்ட ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பேசினார் ரஜினிகாந்த். சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டமானது, நடைபெற்றது. முதலில், இணைய வழியில் அவர் தன்னுடைய மன்றத்தின் நிர்வாகிகளைச் சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேரடியாக அழைத்து சந்தித்ததால், ரசிகர்கள் குஷியாகினர்.

இந்தக் கூட்டத்தில், நாளை (1-12-2020) அன்று ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தற்பொழுது அரசியலுக்கு வரலாமா, நிலமை என்ன, என்னுடையப் பெயருக்கு ஒரு சிலர் கலங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் பேசியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பணம், பதவிக்கு ஆசைப்படுபவர்கள் என்னுடன் இருக்க முடியாது எனவும், மன்றத்தின் ஒரு சில நிர்வாகிகளை மாற்ற வேண்டி உள்ளது எனவும் கூறியிருக்கின்றாராம்.

இந்த சூழலில், செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் எனவும், அரசியல் கட்சி குறித்து சீக்கிரம் முடிவு எடுக்கப்படும் எனவும், நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்றுத் தெரிவித்தார். இதனால், டிசம்பர் 12ம் தேதி அன்று அவருக்கு பிறந்தநாள் வருவதால், அன்று இது குறித்த தகவல்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஆனால், அவர் டிசம்பர் ஒன்றாம் தேதி கட்சிக் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என, செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. இந்த சூழலில், சிஏஏ போராட்டத்தின் பொழுது, தன்னுடையக் கட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த், தற்பொழுது விவசாயிகளின் போராட்டத்தின் பொழுது கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு உள்ளார். இது மக்களை திசைத் திருப்பும் செயல் என, பலரும் ரஜினியினை குற்றம்சாட்டி வருகின்றனர்.

HOT NEWS