கந்தனுக்கு அரோகரா! ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை! எல்லா மதமும் சம்மதமே!

22 July 2020 சினிமா
rajinithalaivar.jpg

கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலானது, கந்த சஷ்டி கவசத்தினை ஆபாசமாக சித்தரித்து கொச்சையான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டனர். இதனால், அந்த சேனல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமின்றி, அந்த சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அழிக்கப்பட்டன. இது தமிழகத்தில் புதிய புயலினைக் கிளப்பி உள்ளது.

இது குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், கந்த சஷ்டி கவசத்தினை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

HOT NEWS