மொழி திணிப்பை யாரும் ஏற்க மாட்டார்கள்! இந்தியாவிற்கு பொது மொழி கிடையாது!

18 September 2019 சினிமா
rajinispeech.jpg

தென் இந்தியாவில் பொதுவாக ஹிந்தி மொழியை ஏற்கமாட்டார்கள் என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த அவர், எந்த மொழியையும் திணிக்க முடியாது, குறிப்பாக ஹிந்தி மொழியை திணித்தால், கண்டிப்பாக தமிழ்நாடு மட்டுமின்றி, தென் இந்தியாவின் எந்த மாநிலமும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏன் வடநாட்டின் பல மாநிலங்களில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

நம் நாட்டிற்கு மட்டுமல்ல, எந்த நாட்டிற்கும் ஒரு பொதுவான மொழி இருந்தால், அந்த நாட்டின் வளர்ச்சிகு நல்லது. துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டிற்கு பொது மொழியைக் கொண்டு வர முடியாது எனப் பேட்டியளித்தார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் தென்னிந்தியாவில் இருந்து, தன்னுடைய எதிர்ப்பினை ஏற்கனவேப் பதிவு செய்துவிட்டனர். இந்நிலையில், தற்பொழுது சூப்பர் ஸ்டாரும் தன்னுடைய எதிர்ப்பினை, பதிவு செய்துள்ள நிலையில், அமித் ஷாவின் கருத்திற்கு எதிர்ப்பு கூடியுள்ளதாக, சமூக வலைதளங்களில், பேசி வருகின்றனர்.

HOT NEWS