டிஸ்கவரி இந்தியா டிவி சேனல் நடத்தும், உலகப் புகழ் பெற்ற மேன் vs வொய்ல்ட் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
கடந்த சுதந்திரத் தினத்தன்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மேன் vs ஓயில்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனையடுத்து, தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்காக, நேற்று மேன் vs ஒயில்ட் நிகழ்ச்சியின் நடத்துனர் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து, பந்திப்பூர் பகுதியில் உள்ள வனப் பகுதிக்கு சென்றார் ரஜினிகாந்த். அங்கு சுமார், 6 மணி நேரம் இந்த சூட்டிங் நடைபெற்றது.
அப்பொழுது, அவருடன் பலரும் பாதுகாப்பிற்காக சென்றனர். பின்னர் சூட்டிங் முடிந்ததும் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், எவ்வித பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை எனவும், காலில் முள் மட்டுமே குத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.