வருகின்ற நவம்பரில் ரஜினிகாந்த் தனி கட்சியினை ஆரம்பிப்பார் என, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடிகரும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், நான் அரசியலுக்கு வருவதற்காகவே, இவ்வளவு நலத்திட்ட உதவிகளைச் செய்வதாகப் பலர் பேசுகின்றனர். அவ்வாறு நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் தலைவரின் ரசிகன் மட்டுமே. அரசியலில் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவருடைய ரசிகனாக மட்டுமின்றி, நல்ல மனிதனாகவே இத்தகைய உதவிகளை செய்து வருகின்றேன். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. அவருடைய ஆன்மீக அரசியல் வெல்லும்.
அதற்காக உங்களைப் போன்ற ஒரு சாதாரண ரசிகனாகவே, நானும் காத்திருக்கின்றேன் என்றுக் கூறியிருக்கின்றார். மேலும், அதில், நவம்பர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவும் தற்பொழுது ரஜினிகாந்த் நவம்பரில், அரசியலுக்கு வருவதினை உறுதிப்படுத்தி உள்ளது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் எனவும், ஆட்சியில் அமர்வார் எனவும் தமிழருவி மணியன் பேசி வருகின்றார்.
இதனால், ரஜினியின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். தற்பொழுது அவர் அரசியலுக்கு வர உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவர் பற்றி பேசி வருகின்றனர். அவர் கட்சி ஆரம்பித்ததும், மதுரையில் தான் முதல் மாநாட்டினை நடத்துவார் எனப் பலரும் கூறி வருகின்றனர். இதனால், ரஜினியின் ஆன்மீக அரசியல் மீதான எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.