ரஜினிகாந்த் கட்சிக்கு தற்பொழுது பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி அன்று, தன்னுடைய கட்சியினைப் பற்றி அறிவிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதனால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி, கட்சித் தொடங்குவது குறித்த வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ரஜினிகாந்த் தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் தன்னுடையக் கட்சிக்கு மக்கள் சக்தி கழகம் என்றப் பெயரில், அவர் பெயரினை பதிவு செய்திருந்தார்.
இருப்பினும் பெயர் சரியாக இல்லாத காரணத்தால், மக்கள் சேவைக் கட்சி என்றப் பெயரில் கட்சியின் பெயரினை ரிஜிஸ்டர் செய்துள்ளார். இதில், அவருக்கு பாபாவின் முத்திரையினை சின்னமாக கேட்டதாகத் தெரிகின்றது. ஆனால், அவருக்கு அந்த சின்னத்திற்கு பதிலாக ஆட்டோ ரிக்சா சின்னமானது ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில், தொடர்ந்து தேர்தல் ஆணையத்தினை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், பாபாவின் முத்திரை வேண்டும் என்றுக் கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்பொழுது வெளியாகும் செய்திகளைப் பற்றி யாரும் கண்டு கொள்ளத் தேவையில்லை எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் எனவும், ரஜினி மக்கள் மன்றம் அறிவித்து உள்ளது.