தர்பார் படத்தில், தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிசியாகி இருந்து வருகிறார். தர்பார் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்ற நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தினை, தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் என்றப் பெயர் பெற்ற, சிறுத்தை சிவா சென்று சந்தித்தார்.
தொடர்ந்து, இரண்டு முறை சந்தித்த நிலையில், ரஜினிகாந்தும், சிறுத்தை சிவாவும் இணைய உள்ளனர் என்ற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வந்தன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்து வந்தது.
தர்பார் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற நிலையில், பொங்கலுக்குத் தள்ளிப் போனது. 2020ம் ஆண்டு, பொங்கல் முடிந்த கையோடு, தலைவர் 168 எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதனை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்ற தகவலை, இத்திரைப்படத்தினை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எந்திரன், பேட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும், மூன்றாவது திரைப்படம் இது ஆகும். இப்படத்திற்கு, யார் இசையமைக்க உள்ளார் மற்றும் மற்றக் கலைஞர்களைப் பற்றியத் தகவல்கள், விரைவில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.