கமலுடன் இணைவது குறித்து கருத்துத் தெரிவித்த ரஜினி!

21 November 2019 அரசியல்
rajinikanth123.jpg

கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முதலில் நான் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதற்கு, தமிழ் மக்கள் தான் காரணம் எனவும், இதனை தமிழ் மக்களுக்கே சமர்ப்பணம் எனக் கூறினார். தேவைப்பட்டால் நீங்களும், கமல்ஹாசனும் இணைந்து செயல்படுவோம் என கூறியிருந்தீர்கள். அப்படி இருந்தால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வருகின்றது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ரஜினி, அது தேர்தல் சமயத்தில், அப்பொழுது நிலவும் சூழ்நிலைகளைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. நாம் கட்சி ஆரம்பிக்கும் பொழுது, கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்தலோசித்து முடிவு செய்யப்படும். அது பற்றித் தற்பொழுது நான் பேச விரும்பவில்லை. தற்பொழுது, அமைச்சர்கள் தங்களுடையப் பேச்சினை விமர்சனம் செய்கின்றனர். அது பற்றிய உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர். மேலும், தமிழகம் திராவிட பூமி என்றும், ஆன்மீக அரசியல் எடுபடாது என, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் எனவும் கூறினர்.

வரும் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தினை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள் எனக் கூறினார்.

HOT NEWS