சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது, இமயமலைக்குச் சென்றுள்ளார். தீவிர பாபா பக்தரான ரஜினிகாந்த், தன்னுடைய ஒவ்வொரு படம் முடிந்ததும், இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, அவர் இமயமலைக்குச் செல்லாமல் இருந்தார். இந்நிலையில், நவம்பர் மாதம், தீபாவளி முடிந்த பிறகு, இமயமலைக்கு செல்ல இருந்த ரஜினி, தற்பொழுது அதற்கு முன்பாகவே இமயமலைக்குச் சென்றுவிட்டார்.
ரிஷிகேஷில் சிறிது ஓய்வெடுக்கும் ரஜினி, பின்னர் அங்கிருந்து இமயமலை செல்கின்றார். அங்குள்ள பாபா குகை மற்றும் ரிஷிகேஷில் வழிபாடு மற்றும் தியானம் செய்ய உள்ளார் சூப்பர்ஸ்டார்.
ஏற்கனவே, கேதர்நாத் மற்றும் பத்திரிநாத் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கு அவர் செல்லமாட்டார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தர்பார் படத்தின் சூட்டிங் முடிந்துள்ள நிலையில், இமயமலை சென்றுள்ள ரஜினி, சுமார் 10 முதல் 15 நாட்கள் அங்கு இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பின்னர், தர்பார் படத்தின் டப்பிங் மற்றும் புரோமோஷன் பணிகளில் ஈடுபடுவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.