போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றுக் கூறியதோடு சரி, அரசியல் கட்சி ஆரம்பிப்பதுப் பற்றியோ அல்லது கட்சியின் பெயர் பற்றியோ எதையும் கூறாமல், மௌனம் காத்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் கட்சி ஆரம்பிப்பதற்குள், நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து, தேர்தலிலும் நின்று, பல இடங்களில், நல்ல வாக்குகளையும் பெற்றுவிட்டார். இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் தர்பார் ரிலீஸிற்குப் பின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாக, பிரபல சினிமா பார்வையாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தர்பார் திரைப்படம் வரும் 2020 பொங்கலுக்கு, வெளியாக உள்ளது. அதன் பிறகு, அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்பொழுது இறங்கினால், கடும் நெருக்கடிகளை அவர் சந்திக்க வேண்டும் எனவும், அவர் 2020 ஜனவரியில் நடைபெறும் சனிப் பெயர்ச்சிக்குப் பின் வந்தால், கண்டிப்பாக நல்ல வளர்ச்சி உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது.
இதனை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி 24ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சிக்குப் பின், அரசியலுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அவர் தனியாக கட்சி ஆரம்பிப்பாரா அல்லது ஏற்கனவே உள்ள கட்சிகளில், ஏதாவது ஒன்றில் இணைந்து செயல்படுவாரா என்பதை காலம் தான் முடிவு செய்யணும்!
எது எப்படியோ, ஒரு வழியாக ரஜினியின் ரசிகர்கள் இல்லை இல்லை பக்தர்கள், போருக்குத் தயாராகும் காலம் வந்துவிட்டது.