ரஷ்யாவில் சீனா இந்தியா பேச்சுவார்த்தை! இந்தியா மீது பழி போடும் சீனா!

05 September 2020 அரசியல்
rajnathsinghrussia12.jpg

ரஷ்யாவில் இந்தியாவும், சீனாவும் லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் மற்றும் லே பகுதியில், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், சீனா இராணுவம் தன்னுடையப் படைகளை, லடாக் பகுதியில் குவித்துக் கொண்டே உள்ளது. அதே சமயம், இந்தியாவும் தன்னுடைய இராணுவத் துருப்புக்களை லடாக் பகுதியில் குவித்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்பொழுது ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனடிப்படையில், ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து, இந்தியாவில் ஏழு லட்சம் ஏக47 துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக, சீன இராணுவம் கூறியது. அதனையொட்டி, நேற்று ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையின் பொழுது, இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். அவர் இந்த விவகாரம் குறித்து, காட்டமாகப் பேசியதாகத் தெரிகின்றது. ஆனால், சீனா இது பற்றி பேசுகையில், தற்பொழுது லடாக் பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு இந்தியா தான் காரணம் என்றுக் கூறியுள்ளது. இந்தியாவின் தேவையற்ற செயல்களால் தான், இப்பொழுது லடாக் பகுதியில் அமைதி பறிபோய் உள்ளது என, சீனா கூறியுள்ளது.

ஒரு இன்ச் நிலத்தினைக் கூட எங்களால் விட்டுக் கொடுக்க முடியாது என, சீனா கூறியுள்ளது.

HOT NEWS