ஆறு பாலங்களை ஜம்மூ காஷ்மீர் பகுதியில் திறந்து வைத்த ராஜ்நாத்சிங்!

10 July 2020 அரசியல்
rajnathsinghlatest.jpg

சர்வதேச எல்லைப் பகுதிகள், ஜம்மூ காஷ்மீர் மற்றும் லைன்ஆஃப் கன்ட்ரோல் பகுதிகளில் கட்டப்பட்டு இருந்த, புதிய ஆறு பாலங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கிழக்கு லடாக் மற்றும் லே பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், பாலங்களை வேகமாக கட்ட ஆரம்பித்தது. தற்பொழுது பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்ததால், அவைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். டெல்லியில் இருந்து காணொலி மூலம், இந்தப் பாலங்களைத் திறந்து வைத்தார்.

அதேபோல் சாலைகளையும் அவர் திறந்து வைத்தார். 198 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலத்தினையும், 744 கிலோமீட்டர் நீளமுள்ள ஜம்மூ காஷ்மீருக்குச் செல்லும் பாலத்தினையும் திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், நான் பார்டர் ரோட் ஆர்கனைசேஷனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தப் பாலங்கள் சரியான நேரத்தில், கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

சாலைகளும் பாலங்களும் நாட்டினை இணைப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரதமர் மோடி அவர்கள், இது குறித்து பார்வையிட்டு வருவதாகவும், இந்த ப்ராஜெக்ட்டிற்குத் தேவையான பட்ஜெட்டும் தனியாக உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.

HOT NEWS