இன்று காலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 101 பாதுகாப்புத்துறை பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உள்ளார்.
இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், இன்று (09-08-2020) காலை 10 மணியளவில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஆத்ம நிர்பார் பாரத் என்ற திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்ற 101 இராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த பொருட்களை, இனி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றுக் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கானப் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார். இந்தப் பொருட்கள் குறித்த முடிவினை, பங்குதாரர்கள், ஆயுத உற்பத்தியாளர்கள், இராணுவ அதிகாரிகள், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவம், விமாப்படை, கப்பற்படை உள்ளிட்டவைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை வருகின்ற, 2021ம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.