ராஜாவுக்கு செக்! சேரனின் அடுத்த க்ரைம் த்ரில்லர்!

19 November 2019 சினிமா
rajavukkucheck.jpg

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின், நடிகர் சேரனின் மார்க்கெட் கூடிவிட்டது எனலாம். பொதுவாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்தவர்களுக்கு இருக்கின்ற மார்க்கெட்டும் காலியாகி விடும். அதற்கு உதாரணம் பலர். ஜூலி, ரைசா போன்ற ஒரு சிலர் மட்டுமே, அதிர்ஷ்டவசமாக வளர்கின்றனர்.

சேரனுக்கு அப்படியொரு வளர்ச்சித் தேவைப்படவில்லை. ஆனால், அவர் சினிமாவில் இருப்பது அனைவருக்கும் தெரிய வேண்டி இருந்தது. அதனால், தன்னுடைய இருப்பினைக் காட்டிக் கொள்வதற்காக, அவர் பிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு சென்றார். நல்ல பெயரும் பெற்றார். அவர் போட்டியில் வெல்ல இயலவில்லை என்றாலும், அவருக்கு என, தனி ரசிகர் படையே அமைந்துவிட்டது.

இந்நிலையில், தற்பொழுது அவர் திரைப்படம் ஒன்றினை உருவாக்கி வருகின்றார். ராஜாவுக்கு செக் எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், சேரன் நடிக்கின்றார். இயக்குநர் சாய் ராஜ்குமார் இப்படத்தினை இயக்குகின்றார்.

இதில், அவர் தூக்கம் சம்பந்தப்பட்ட (Hypersomnia Sleeping Disorder) வியாதியை உடையவராக நடித்து வருகின்றார். சேரன் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவினை, தன் மகளாகப் பார்த்தார். மேலும், அவர் தந்தை-மகள் செண்டிமெண்டில் உருகும் நபர். அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திலும், உள்ளது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, பாண்டவர் பூமி போல இவர் நடிக்கும் இந்தப் படமும் ஹிட்டானால் சரி தான்.

HOT NEWS