வெகு விமர்சையாக நடைபெற்ற பூமிபூஜை! பாஜ தொண்டர்கள் மகிழ்ச்சி!

05 August 2020 அரசியல்
modiayodhyaram.jpg

நீண்ட காலமாக, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணியானது தற்பொழுது தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தப் பிறகு, மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையினை ஏற்படுத்தியது. இந்த அறக்கட்டளையானது, இன்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையினை செய்ய, ஏற்பாடு செய்தது. இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதியம் 12 மணியளவில் ஆரம்பித்த பூஜையில் கலந்து கொள்வதற்கு முன், குழந்தை ராமரை வணங்கிய மோடி நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார். பின்னர், அவர் பூமி பூஜையில் கலந்து கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க, பூமி பூஜையானது சிறப்பாக நடைபெற்றது. இதனைக் கொண்டாடும் விதமாக, 1.25 லட்சம் லட்டுகள் இன்று விநியோகிக்கப்பட உள்ளன.

பூமி பூஜையினைத் தொடர்ந்து, அந்தக் கோயிலில் பாரிஜாத மரத்தின் கன்றினை பிரதமர் மோடி நட்டார். இந்தக் கோயில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS