நவராத்திரி நாளில் துவங்குகின்றது இராமர் கோயில் கட்டும் பணி!

05 October 2020 அரசியல்
ramartemple.jpg

பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இராமர் கோயில் கட்டும் பணியானது, வருகின்ற நவராத்திரி அன்று துவங்க உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று, இராமர் கோயில் கட்டுவதற்கானப் பூமி பூஜையானது, உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தக் கோயில் கட்டுவதற்கு தேவையான அனைத்துக் கற்களும், ஏற்கனவே இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. கோயில் கோபுரங்களுக்கான கற்கள் அனைத்தும், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு விட்டது.

இனி கட்டுமான வேலைகளை ஆரம்பிப்பது மட்டுமே பாக்கி. இந்தக் கோயிலைக் கட்டும் பணியினை இந்தியாவின் தலைசிறந்த சிற்பியான சோம்பூரா ஏற்றுக் கொண்டு உள்ளார். இந்தக் கோயிலின் அஸ்திவாரப் பகுதிகளை, சென்னை ஐஐடி பிரிவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து, வருகின்ற நவராத்திரி நாட்களில் 1200 தூண்களைக் கொண்ட பிரம்மாண்டமான அஸ்திவாரமானது அமைக்கப்பட உள்ளது.

இந்தத் தூண்களும் ஏற்கனவே வந்துவிட்டன. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை லார்சன் ட்யூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்தத் தூண்கள் அமைக்கப்பட்டு, அஸ்திரவாரம் சோதனை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து இந்தக் கோயிலானது, விரைவில் கட்டி முடிக்கப்படும்.

HOT NEWS