பிரம்மாண்டமாக உருவாகும் ராமர் கோயில்! எப்படி இருக்கும் தெரியுமா?

05 August 2020 அரசியல்
ramartempleayodhi.jpg

இன்று நடைபெற்று முடிந்த பூமி பூஜையினைத் தொடர்ந்து, இராமர் கோயிலானது அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கோயில் எவ்வாறு இருக்க உள்ளது என, சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தக் கோயிலினை இந்தியாவின் பிரபலக் கட்டுமான நிபுணரான, சந்திரகாந்த்பாய் சோம்புரா என்பவர் தான், கட்ட உள்ளார். இந்தக் கோயிலானது 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்தக் கோயிலினைக் கட்டுவதற்காக இந்தியாவின் பலப் பகுதிகளில் இருந்து, சுமார் 30 ஆண்டுகளாக 2 லட்சத்திற்கும் அதிகமான கற்கள் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் கற்களுடன், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மலைகளினைச் சேர்ந்தக் கற்களும், பயன்படுத்தப்பட உள்ளன. இந்தக் கற்களால் ஆன மிகப் பெரிய கோயிலானது இந்திய அளவில் பெரிதாக உருவாக்கப்பட உள்ளது. சுமார், 67 ஏக்கர் நிலப்பரப்பளவில் ராமர் கோயில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இந்தக் கோயிலினை 10 ஏக்கரிலும், 57 ஏக்கரில் வளாகமும் அமைக்கப்பட உள்ளது.

இந்தக் கோயிலில் மொத்தம், ஐந்து கோபுரங்கள் அமைய உள்ளன. முதலில் ரெங்க மண்டபமும் அதனைத் தொடர்ந்து நிருத்ய மண்டபமும், பின்னர் குடூ மண்டபமும், அதற்கு அடுத்தாக கோயில் கருவறையும் அமைய உள்ளது. இவைகளுக்குப் பின்னால், சிகரம் என்றக் கோபுரம் அமைய உள்ளது. இந்த சிகரம் கோபுரத்தின் உயரம் சுமார் 161 அடி ஆகும்.

இந்தக் கோயிலின் அடித்தளமானது, ஸ்ரீராம் எனக் குறிப்பிடப்பட்ட 2,00,000 செங்கற்களால் உருவாக்கப்பட உள்ளது. நகரா என்ற வடிவமைப்பில் இந்தக் கோயில் உருவாக இருக்கின்றது. இந்தக் கோயிலில் மொத்தம் 360 தூண்கள் அமைய உள்ளது. அதன் அடித்தளம், 16 அடி அகலத்திற்கு அமைய உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்தக் கோயிலுக்குள் இராமர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி உட்படப் பல சன்னதிகள் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS