மதுரையில் இராமாயண இரயில்! அமைச்சர் துவக்கி வைத்தார்!

07 March 2020 அரசியல்
ramayanarail.jpg

மதுரையில் இராமாயண இரயில் என்ற சிறப்பு இரயிலினை, மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் பச்சைக்கொடி காட்டித் துவக்கி வைத்தார்.

இந்த சிறப்புச் சுற்றுலா இரயிலானது, திருநெல்வேலியிலிருந்து கிளம்பி ஹம்பி நகர் வரை சென்று, பின்னர், மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகின்றது. இடையில், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், சித்ரகுட்தாம்- பக்ஸார் - ரகுநாதபுர சிதமர்ஹி - ஜனக்புரி-அயோத்தி - நந்திகிராம் - அலகாபாத் - சிறிங்காவெர்பூர் – நாசிக் ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளது.

இதற்கான தொகையினையும் மத்தியச் சுற்றுலாத் துறையானது அறிவித்துள்ளது. ஒரு நபருக்கு15,990 ரூபாயானது கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS