பிகில் திரைப்படம் பற்றி பிரபல விமர்சகர் கருத்து!

18 October 2019 சினிமா
bigiltrailer.jpg

பிகில் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்தும், சூட்டிங் குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் என்பவர், சினிமாத் துறையின் பாக்ஸ் ஆபிஸ், விமர்சனம் மற்றும் கிசுகிசு உள்ளிட்டப் பலத் தகவல்களை தெரிவித்து வருகிறார். அவர் தற்பொழுது, பிகில் திரைப்படம் குறித்து பலத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படம் ஆரம்பித்த பொழுது, அதன் பட்ஜெட் 125 கோடி ரூபாய். ஆனால், படம் முடிவடையும் பொழுது அதன் பட்ஜெட் 180 கோடி ரூபாயாக மாறிவிட்டது. மேலும், விஜயிடம் 70 நாட்கள் கால்ஷீட் வாங்கினராம். ஆனால், அவர் கிட்டத்தட்ட 110 நாட்கள் நடித்துக் கொடுத்தாராம். படத்தினைப் பார்த்த விஜய், மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம்.

இவருடைய இந்தத் தகவல் தற்பொழுது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

HOT NEWS