சிகரெட்டில் விளக்கு ஏற்றிவிட்டேன்! ராம்கோபால் வர்மா அதிரடி!

07 April 2020 சினிமா
ramgopalvarma.jpg

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, இந்தியா முழுவதும் விளக்கு ஏற்றப்பட்டது. இந்நேரத்தில், ராம்கோபால் வர்மா தன்னுடைய ஸ்டைலில் விளக்கு ஏற்றி உள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணிக்கு, வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு ஒன்பது நிமிடங்களுக்கு, அகல் விளக்கு மற்றும் டார்ச் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி, நம்முடைய ஒற்றுமையை காட்ட வேண்டும் என, பாரதப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுக்க பொதுமக்கள் அனைவரும் தாமாக முன் வந்து, வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, கையில் மெழுகுவர்த்தி, அகல்விளக்கு, டார்ச் லைட் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தினர். பலப் பிரபலங்களும், இந்த செயலினை செய்து, வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை எடுத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், தெலுங்கின் புகழ் பெற்ற இயக்குநரான ராம்கோபால் வர்மா, ஒன்பது மணிக்கு விளக்கேற்றுவதாக வாயில் சிகரெட்டினை வைத்துக் கொண்டு, விளக்கு ஏற்றியுள்ளார். இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS