வைரலான நபர் வீடு சென்று சேர்ந்தார்! எங்களைப் போன்றவர்களுக்கு உதவுங்கள் என கோரிக்கை!

19 May 2020 அரசியல்
rampukarpandit.jpg

தன்னுடையப் பச்சிளங் குழந்தையின் மரணத்தினைக் கேள்விப்பட்டு அழுத நபரின் புகைப்படமானது, இணையத்தில் வைரலானது. அவர் தற்பொழுது தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு காரணமாக, பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில் பல லட்சம் புலம் பெயரும் தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். தொடர்ந்து, நடைபயணம், சைக்கிள் பயணம் எனப் பலவற்றினைப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லியில் உள்ள திரையறங்கில் வேலை செய்து வந்தார். அவர் தன்னுடைய சொந்த ஊரான பீகாரில் உள்ள பிகூசாரி மாவட்டத்திற்கு திரும்புவதற்காக, கிளம்பினார். அவர் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே அவருடைய சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், டெல்லியில் உள்ள பாலத்தில் அவர் வந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய போனிற்கு கால் வந்துள்ளது.

அதில், அவருக்குப் புதிதாகப் பிறந்துள்ள புதிய ஆண் குழந்தை இறந்துவிட்டதாக அவருடைய மனைவிக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்த நபர், பாலத்திலேயே கதறி அழுதார். 38 வயதான ராம்புக்கார் பண்டிட் அந்தப் பாலத்திலேயே சுருண்டு விழுந்தார். இந்த நிகழ்வினை, பிடிஐ செய்தி அமைப்பின் போட்டோகிராபர் அதுல் யாதவ் புகைப்படம் எடுத்தார்.

அவர் தொடர்ந்து, அந்த இடத்திலேயே மூன்று நாட்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. பின்னர், அங்கு ஏதேச்சையாக வந்த பெண்மணி அவருக்கு 5,500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அதனை வைத்து, டெல்லியில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அங்கு வந்த அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என்ற சோதன நடத்தப்பட்டது. பின்னர், அங்கு அவரைக் காண அவருடைய ஒன்பது வயதுள்ள பெண் குழந்தையும், அவருடைய மனைவியும் வந்து சந்தித்துள்ளனர். அவர்கள் இவருக்கு உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளனர். அதனை அவரால் உண்ண இயலாத அளவிற்கு, அவருடைய உடல் பலவீனமாக இருந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு நோய் தொற்று இல்லை என்றும், என்னைப் போன்றவர்களுக்கு அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS