ஆன்லைனில் பேக் அக்கவுண்டுகள் மூலம் வரும் பிரச்சனைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வரிசையில் தற்பொழுது புதிதாக சிக்கியிருக்கும் நபர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்டப் படங்களில் நடித்த இந்த நடிகை, தற்பொழுது சென்னை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னுடையப் பெயரில் போலியான சமூக வலைத்தளக் கணக்குகள் இயங்குவதாகவும், அதில் ஆபாசமானப் பதிவுகள் என்னைப் பற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தன்னுடைய டிவிட்டர் கணக்கில், தன்னுடைய உண்மையான இன்ஸ்டாகிராம் பக்கத்தின் விவரத்தையும் வெளியுட்டுள்ளார். கடந்த வாரம் இவருடையப் பெயரில் இயங்கி வரும் போலியான கணக்கில் இருந்து, டாப் லெஸ்ஸாக முதுகினைக் காட்டி ஆபாசமாகப் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் உலா வந்தது. இதனையடுத்து, தற்பொழுது அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.