தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர், தெலுங்கானாவில் நிலம் வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நயன்தாரா, நடிகை ரம்யா கிருஷ்ணன், சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ஆகியோர் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் நிலம் விற்கும் நிறுவனத்திடம் இருந்து, கோடிக் கணக்கான ரூபாயினை வழங்கி, ஏக்கர் கணக்கில் வாங்கியுள்ளனர். அந்த நிறுவனம், விவசாயிகளிடம் சில லட்ச ரூபாயினை வழங்கி நிலங்களை வாங்கி, அதனை கோடிக் கணக்கில் விற்றுள்ளது.
இதில், இந்த புறம்போக்கு நிலமானது நீர் ஆதாரத்தினை உடைய குளம் மற்றும் ஏரிகள் என்று, வட்டாட்சியர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலங்களில் எவ்வித கட்டுமானமும் செய்ய அனுமதி கிடையாது என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு, நோட்டீஸ் மூலம் விளக்கமும் கேட்டுள்ளனர். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.