மாநிலங்களவை எம்பியாகும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி!

18 March 2020 அரசியல்
ranjan-gogoi.jpg

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய், தற்பொழுது பாஜக சார்பில் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்க உள்ளார்.

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இராமர் கோயில், பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகோய் தற்பொழுது, தன்னுடைய வேட்புமனுவினை அளித்துள்ளார். இதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியாவின் மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக, பலரும் தங்களுடைய வேட்புமனுவினைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இது குறித்து, ரஞ்சன் கோகோய் கூறுகையில், நான் அநேகமாக நாளை (18-03-2020) டெல்லி செல்வேன். அங்கு, நான் ஏன் இந்த முடிவினை எடுத்தேன் எனக் கூறுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பலர் இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, பின்னர் மாநிலங்களவை எம்பியாக ஆகி இருக்கின்றனர். அசாம் மாநிலத்தில் இருந்து, அவர் தற்பொழுது மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகோய், பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS