ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை இவ்வளவா? தமிழக அரசு பதில்!

19 April 2020 அரசியல்
coronatest.jpg

தமிழகம் வந்தடைந்துள்ள, ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலை என்ன என்று தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக வருகின்ற மே-3ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நோயினை கண்டுபிடிக்கும் கருவிகளை, இந்திய நிறுவனங்களும் கண்டுபிடித்து வருகின்றன. அதே போல், சீனாவில் இருந்தும் இந்திய அரசாங்கம் இறக்குமதி செய்து வருகின்றது.

இதில், தமிழகத்திற்கு மொத்தம் 50,000 ரேபிட் கிட்கள் வந்துள்ளன. தமிழக முதல்வர் கூறுகையில், தமிழகத்திற்கு ஒன்றரை லட்சம் ரேபிட் கிட்கள் தேவை எனவும், அவைகளை விரைவில் மத்திய அரசு வழங்கும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், ஒரு கிட்ன் விலை என்ன என்றத் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஒரு கிட்டின் விலை ரூபாய் 600 என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 50,000 கிட்களின் விலையானது, மூன்று கோடியே முப்பதாறு லட்ச ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இதற்கு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. ஒரு ரேபிட் கிட் கருவியினை வைத்து, 100 நோயாளிகளை மட்டுமே, சோதிக்க இயலும். இந்த கருவியினைப் பயன்படுத்தி, நோயாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா இல்லையா என, 15 முதல் 30 நிமிடங்களில் கண்டறிய இயலும்.

இந்த நிலையில், தற்பொழுது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் வாங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்ன் விலையானது, 337 ரூபாயாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ள கிட்டின் விலையானது 600 ரூபாயாக உள்ளது. இதனால், பெரிய அளவில் கேள்விகளும், விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு உள்ளன.

இதற்குப் பதிலளித்துள்ள தமிழக அரசானது, தமிழ்நாடு சார்பில் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்துவிட்டதால், இதன் விலையானது அதிகமாக உள்ளது என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS