ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்! மத்திய அரசு அறிவிப்பு!

21 April 2020 அரசியல்
rapidktestkit.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 18,985 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 3,260 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 603 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தினைப் பொறுத்தமட்டில், 1596 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 635 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 18 பேர் மரணமடைந்து உள்ளனர். கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்க உதவும் ராபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய அரசு, சீனாவில் இருந்து வரவழைத்து மாநிலவாரியாக பகிர்ந்து அளித்தது. தமிழகத்திற்கு மொத்தமாக 50,000 ராபிட் டெஸ்ட் கருவிகள் வந்தடைந்தன.

தமிழகத்தினால் வாங்கப்பட்ட ஒரு கருவியின் விலையானது, 600 ரூபாய் ஆகும். இது பெரும் அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தற்பொழுது அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்பொழுது இந்தியா முழுவதும் பயன்படுத்தும் ராபிட் டெஸ்ட் கருவிகளை அடுத்த இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தக் கருவிகள் முன்னுக்குப் பின் முரணான முடிவினைத் தருவதாலும், பெரும்பாலானவை தவறான முடிவினை அளிப்பதாலும், அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், சுமார் 90% கருவிகள் தவறான முடிவினைக் காட்டியுள்ளது. இதனால், ராபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS