தெலுங்கு பட உலகின் முக்கியமான நடிகையாக, தற்பொழுது ராஷ்மிகா மந்தனா மாறியுள்ளார். அவர் நடித்துள்ள பீஷ்மா திரைப்படமானது, தற்பொழுது வெளியாகி உள்ளது.
இதற்காக, நடைபெற்ற போட்டோ சூட் நிகழ்ச்சியில், பல்வேறு கோணங்களில் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். அந்தப் போட்டக்களை, வடிவேலுவுடன் இணைத்து, மிமி கிரியேட்டர்கள் மீம்ஸ்களாக மாற்றிவிட்டனர். அவ்வளவு தான்! அந்த மீம்ஸ்கள் தற்பொழுது இணைய உலகில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகை ராஷ்மீகா மந்தணா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், என்னை விட, வடிவேல் சார் தான் சூப்பர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் தற்பொழுது விஜய் 65 படத்தில் நடிகையாக நடிப்பார் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது.