இயக்குநர் கௌதம் ராஜூ என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அரசுப் பள்ளிகளின் அவலநிலையை, ஒரு கைப் பார்த்து இருக்கிறார். அவருடன் நடிகை ஜோதிகாவும் சேர்ந்தால், என்னவாகும்? பள்ளியின் தலைமை ஆசிரியையாக வரும் ஜோதிகா, பள்ளியில் எல்லாம் தவறாக உள்ளதாக உணர்கிறார். அதை எப்படி, மாற்றுகிறார். மாணவர்களை எப்படி படிக்கவைக்கிறார்? இவருக்கு எதிரான சூழ்ச்சிகளில் எவ்வாறு வெல்கிறார் என, கௌதம் ராஜூ ராட்சசியாக நமக்குத் தந்துள்ளார்.
சும்மா சொல்லக் கூடாதுப்பா! படம் முழுக்க ஜோதிகா அதகளம் செய்திருக்கிறார். முழுக்கை ஜாக்கெட், அதுவும் காலர் வைத்தது. அதற்காக ஒரு சிறுகதையும் உண்டு. இருக்கமான முகம், இயல்புக்கு மாறான நடிப்பு, பேசும் போது சுர்ரென்று வரும் கோபம் என, நடிகை ஜோதிகா இப்படத்திற்காக முழுவதுமாக, தன்னை மாற்றியுள்ளார்.
படத்தில் வரும் மற்றக் கதாப்பாத்திரங்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு நடிகை ஜோதிகாவை மட்டுமே காண்பித்து சில நேரங்களில் சலிப்படைய வைத்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களை, பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி என அனுப்புவது, அவர்களை படிக்க வைப்பது, துணைத் தலைமையாசிரியையை சமாளிக்கும் விதம், சண்டைக் காட்சிகள் என அனைத்திலுமே, ஜோதிகா மட்டுமேத் தெரிகிறார்.
படத்தின் பாடல்கள் சுமார் ரகம். சீன் ரோல்டன் இன்னும் முயற்சித்து இருக்கலாம். பின்னணி இசை பரவாயில்லை. சமுத்திரகனியின் சாட்டைப் படம் பார்த்திருப்பீங்க! அத ஒரு பெண் சமுத்திரகனி பண்ணிணா எப்படி இருக்கும்? அதன் ராட்சசி. பெயர் ராட்சசின்னு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கு. அநியாயம் செய்பவர்களுக்கு இவள் ராட்சசி. இந்தப் படத்தைப் பார்த்தால், ஒரு நல்லப் படத்தைப் பார்த்து ரசித்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.