மே மாதத்திற்கான ரேஷன் கடை டோக்கன் விநியோகம்!

23 April 2020 அரசியல்
rationcard.jpg

தமிழகத்தில், மே மாதத்திற்கான ரேஷன் கடை பொருட்களைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக சென்ற மாதம் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால், ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்கள், ரேஷன் கடைகளில் குவிந்ததால், வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கினர்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும், ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் உள்ளிட்டவைகளை வழங்குவதாக, சென்ற மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், வருகின்ற மே மாதமும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கான, டோக்கன்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தற்பொழுது, தமிழகத்தின் ரேஷன் கடைகளில், டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

HOT NEWS