ரேஷன் கடை டோக்கன்! மே-2ம் தேதி தள்ளிவைப்பு! அரசு அறிவிப்பு!

24 April 2020 அரசியல்
rationcard.jpg

ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்களுக்கான டோக்கனானது, மே-2ம் தேதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது மே-3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் உணவுப் பிரச்சனைகளைப் போக்குவதற்காக, இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில், வருகின்ற மே-3ம் தேதி வரை இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்னும், கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்றக் காரணத்தினால், ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்றும், நாளையும் வழங்கப்படுவதாக இருந்த ரேஷன் கடைப் பொருட்களை வாங்குவதற்கான டோக்கனை, வருகின்ற மே மாதம்-2ம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாங்கிக் கொள்ளலாம் எனவும், அன்றைய தினங்களில் ரேஷன் பொருட்களுக்கான டோக்கனானது, அந்தந்த வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும், அந்த டோக்கனில் உள்ள நேரத்திற்கு சென்று, பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS