இந்திய அளவில் ஹிட்டான கன்னடத் திரைப்படம் கேஜிஎப். இந்தத் திரைப்படத்தில், நடிகர் யாஷ் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் வசூலில் சக்கைப் போடு போட்டது. இதனைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங், தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இந்திரா காந்தி கதாப்பாத்திரம் வருகிறது. இந்தக் கதாப்பாத்திரத்தில், யார் நடிக்க உள்ளார் எனப் பலரும் எதிர்ப்பார்த்தனர். இந்நிலையில், ரவீனா டன்டன் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் நடிகையான ரவீனா டன்டன், இந்திய அளவில் புகழ் பெற்றவர். இவர், தற்பொழுது இந்தப் படத்தில், இணையா உள்ளரா? இல்லையா? எனப் பலரும், எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.