ஆபாச படம் பார்த்தால் கைதா? உண்மை என்ன?

11 December 2019 அரசியல்
child12.jpg

ஆபாச படம் பார்த்தால் கைது என, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவிற்கு டிஜிபியாக இருக்கும் ரவி ஐபிஎஸ் அவர்கள் தெரிவித்தார். இதனால், தற்பொழுது தமிழகத்தில் உள்ளப் பலரும் பீதியில் உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுக்க ஆபாசப் படம் பார்க்கும் பழக்கும் அதிகரித்துள்ளது. உண்மையைக் கூற வேண்டும் என்றால், தற்பொழுத 14 வயதில் இருந்து 45 வயதிற்குள் இருக்கும் அனைத்து இந்தியருமே, ஒரு முறையாவது ஆபாசப் படம் பார்த்திருப்பர். அந்த அளவிற்கு, இதன் பயன்பாடு உள்ளது.

இதன் வரவேற்பினை அறிந்த பல நிறுவனங்களும், பணம் கட்டிப் பார்க்கும் ஆபாச வலைதளங்களை நடத்தி வருகின்றனர். பிரேசர்ஸ், அடல்ட் எம்பையர் முதல் பல நிறுவனங்களும் இந்தத் தொழில் மூலம், பல கோடி ரூபாயினை சம்பாதித்து வருகின்றன. இந்தியாவிலும் பல பேர், இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, சென்ற ஆண்டு சுமார் 800க்கும் அதிகமான ஆபாச வலைதளங்களை இந்திய உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, மத்திய அரசுத் தடை செய்தது. அத்தகைய வலைத்தளங்களை இந்தியாவில் இருப்பவர்களால், நேரடியாகப் பயன்படுத்த இயலாது. ஆனால், விபிஎன் உள்ளிட்ட சில விஷேசக் கருவிகளை உபயோகித்து, பயன்படுத்த இயலும். அதற்கு தடை என்பது கிடையாது.

இந்த வலைதளங்களைப் பார்ப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி குற்றம் அல்ல. ஆனால், பார்ப்பவர்கள் பார்ப்பதோடு மட்டும் இல்லாமல், அனைவருக்கும் ஷேர் செய்வது, அதனைப் பெண்களுக்கு ஷேர் செய்து ஆபாசமாகப் பேசி தவறாக நடந்து கொள்வது உள்ளிட்டக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு இந்தியாவில் தண்டனைகள் உண்டு. இதன் காரணமாகவே, இந்த வலைதளங்கள் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆபாசப் படம் பார்த்தால் கைது என ரவி ஐபிஎஸ் கூறிவிட்டார் என, யூடியூப் முதல் செய்தித்தாள் வரை தகவல்கள் பரவிவிட்டன. ஏன், தமிழக அமைச்சர் திரு.மாபா பாண்டியராஜனும் ஆபாசப் படம் பார்ப்பது குறித்துத் தகவல் அளித்தார்.

உண்மையில், திரு. ரவி ஐபிஎஸ் கூறியது குழந்தைகளுக்கு எதிரானப் பாலியல் குற்றங்களைப் பற்றியது தானேத் தவிர, சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஆபாச வலைதளங்களைப் பற்றியது அல்ல. நாம் பயன்படுத்தும் இணையத்தினைத் தவிர்த்து, இணையத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு. மர்மவலை எனப்படும் அந்தப் பகுதியில், 90% இணையம் உள்ளது.

அதில் பெண் குழந்தைகளைக் கடத்தி, அவர்களைக் கொடுமை செய்து வன்புணர்வு, பாலியல் பலாத்காரம் செய்வதை நேரலையாக ஒளிபரப்புகின்றனர். அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும். அப்பொழுது மட்டுமேப் பார்க்க இயலும். இந்த வலைதளங்களைப் பயன்படுத்தபவர்களைப் பற்றி மட்டுமே, லிஸ்ட் ரெடியாவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும், அவர்களிடம் முறையாக விசாரித்து, பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் விளக்கமும் அளித்துள்ளார். ஆனால், அவைகளைப் பற்றி எவ்வித செய்தி நிறுவனமும் தகவல் வெளியிடவில்லை.

உலகளவில் இந்த செயலில் பல லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஆபாசப் படம் பார்க்க எக்ஸ் வீடியோஸ், எக்ஸ்என்எக்ஸ், போர்ன்ஹப், ப்ரேசர்ஸ் உள்ளிட்ட வலைதளங்களையே மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வலைதளங்களில், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் செயல்களில் அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆதலால், இந்த வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட போவதில்லை. ஆனால், மர்மவலையில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடைய, ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களுக்குத் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோக்களை, ஷேர் செய்யும் குழுவினருக்கும், நபர்களுக்குமேப் பிரச்சனையே தவிர, மற்ற நபர்களுக்கு அல்ல. ஆபாசப் படம் பார்ப்பது குற்றமும் அல்ல, தவறும் அல்லை. காலம் காலமாக இருந்து வரும் செயலாகவே, மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தின் இந்த வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். அதிலும், சென்னை தான் முதலிடத்தில் உள்ளது என ரவி கூறினார்.

இந்தியா முழுக்க ஒரே சட்டம் தான் அமலில் உள்ளது. தமிழகத்தில் இவர்களைக் கைது செய்தால், இந்தியா முழுக்கவும் மற்ற மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறி தான். இத்தகைய வீடியோக்களைப் பல ஆயிரம் ரூபாய் பணம் கட்டியேப் பார்க்கின்றனர் என்பதால், இவர்கள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள உள்ளனர் எனப் பொறுத்திருந்தால் மட்டுமேப் பார்க்க இயலும்.

ரவி அவர்கள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், இந்தப் பிரச்சனையில், போன் செய்து போலீஸ் பேசுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. அப்படியொரு செயலில் போலீஸ் எப்பொழுதும் ஈடுபடாது. இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படும் நபர்களுக்கு, போலீசார் சம்மன் அனுப்பி முறையாக விசாரிப்பார்கள் என தெரிவித்தார்.

எனவே, பொதுமக்களிடம் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைவரின் கடமையாகும். மேலும், குழந்தைகளுக்கு எதிராக, ஆபாச வலைதளங்களால் மட்டுமல்ல, சினிமாவாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அவைகள் மீதும் விரைவில் சட்டம் பாய்ந்தால், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

HOT NEWS