ஆபாச படம் பார்த்தால் கைதா? தெளிவுபடுத்திய ரவி ஐபிஎஸ்!

07 January 2020 அரசியல்
raviips.jpg

ஆபாசப் படம் பார்த்தால் கைது செய்யப்படுவர் என்று, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியான திரு.ரவி ஐபிஎஸ் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

இதனால் பலரும் பீதி அடைந்தனர். பின்னர், சில நாட்களுக்கு முன், யூடியூப்பில் உள்ள பிரபல சேனல்களுக்கும், தனியார் செய்தி நிறுவனங்களுக்கும் பேட்டியளித்த அவர், குழந்தைகள் ஆபாசப்படம் பார்ப்பவர்கள், அதனை பதிவேற்றம் செய்பவர்கள், அதனை ஷேர் செய்பவர்கள் மற்றும் டவுன்லோட் செய்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்திருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னால், இந்த செயலை பாராட்டினார் உயர்நீதிமன்ற நீதிபதியான கிருபாகரன். இந்த விஷயத்தில், மேலும் விழிப்புணர்வினை அதிகப்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ள ரவி அவர்கள் கூறுகையில், ஒரு வேளை உங்கள் மொபைலில் அத்தகைய குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தால், அதனை உடனடியாக அழித்துவிடுங்கள். மேலும், அதனை டவுன்லோட் செய்யாதீர்கள். அது சட்டப்படி குற்றம் எனவும் கூறியுள்ளார். குழந்தைகள் அல்லாத பெரியவர்களின் வீடியோக்களை டவுன்லோட் செய்திருந்தாலும், அதனை உடனடியாக அழித்து விட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, குழந்தைகள் ஆபாசப் படம் வைத்திருப்பவர்களையே கைது செய்யப்படுவர் என, ரவி அவர்கள் கூறி வருவதைப் பலரும் திரித்து கூறி வருகின்றனர்.

HOT NEWS