சென்னைக்கு 40 பேர் பட்டியல்! கோவைக்கு 30 பேர் பட்டியல்!

27 December 2019 அரசியல்
raviips.jpg

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு, குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் பட்டியலை அனுப்பியுள்ளதாக, தமிழக குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்கள் மீது, போக்சோ விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு ஏடிஜிபியான டாக்டர்.ரவி.ஐபிஎஸ் அவர்கள் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பினை கிளப்பி இருந்தது.

இதனையடுத்து, பலரும் பலவிதமானக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இதனால், பல யூடியூப் மற்றும் ஊடக சேனல்களுக்கு இது குறித்து விரிவான விளக்கம் அளித்தார் ரவி. மேலும் அவர் பேசுகையில், தொடர்ந்து குழந்தைகள ஆபாச படம் பார்ப்பவர்கள், அதனை ஷேர் செய்பவர்கள், அதனை எடுப்பவர்கள் மற்றும் அப்லோட் செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் கண்டிப்பாக, கடுமையானத் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், திருச்சியினைச் சேர்ந்த நபர் குழந்தைகள் ஆபாசப் படத்தினை, தொடர்ந்து ஷேர் செய்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே ஆபாசப் படம் பார்த்ததால் கைது செய்யப்பட்ட நபர் என்றால் அது அவர் தான். இதனையடுத்து, 30 பேர் கொண்ட பட்டியலானது, விரைவில் வெளியாகும் என ரவி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்பொழுது தமிகழத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தான் அதிக அளவில் குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பதாக ஏற்கனவே, ஆய்வு முடிவுகள் கிடைத்திருந்தன. இதனையடுத்து, தீவிர ஆராய்ச்சிக்குப் பின், சென்னைக்கு 40 பேர் கொண்ட பட்டியலையும், கோவைக்கு 30 பேர் கொண்ட பட்டியலையும், தமிழக குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ள நபர்களை, விரைவில் விசாரிப்பதற்காக காவல்துறையினர் அனுக உள்ளனர் எனவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS