உள்நாட்டு உற்பத்தி சரியும்! தவணையை செலுத்த 3 மாதம் நீட்டிப்பு! ஆர்பிஐ அறிவிப்பு!

22 May 2020 அரசியல்
shaktikantadasrbi.jpg

இன்று காலையில் ரிசர்வ் பேங்க் இந்தியாவின் கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது மே-31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 20 லட்சம் கோடி மதிப்புடைய பலப் பொருளாதார சீர்த்திருத்தங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனிடையே இன்று காலையில், ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்கள் முன்னிலையில், பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளித்துள்ள கடன்களுக்கான வட்டிகள் மற்றும் தவணையை செலுத்து மேலும் மூன்று மாத கால ஒத்திவைப்பினை அறிவித்துள்ளார். அதாவது, வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை, வட்டிகளை செலுத்த தேவையில்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட வைகளுக்கான வட்டியினை செலுத்த 15 மாத கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

ரெப்போ வட்டி விகிதத்தினை 4.4% இருந்து, 4% ஆக குறைத்துள்ளார். அதே போல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமானது 3.75% இருந்து 3.35% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச வர்த்தகமானது, 13% முதல் 32% ஆக குறைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தனிநபர் பயன்பாடு கடுமையாக குறைந்துள்ளது. தனிநபர் நுகர்வானது சுமார் 33% குறைந்துவிட்டது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களுக்கான பண வீக்கமானது 8.6% ஆக அதிகரித்துள்ளது. இந்த 2020-2021ம் ஆண்டின் உள்நாட்டு உற்பத்தியானது கணிசமாக குறைந்து விடும். எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS